Friday, April 6, 2007 |
காலங்கள் தந்த ஏமாற்றங்கள்
|
காதலை தேடினேன் காத்திருப்பு தந்த வலியினால் காணாமல் போனது கற்பனைகள் மட்டுமல்ல மகிழ்ச்சிகளும் தான்...
அன்புள்ளங்களை தேடினேன் அத்தனையும் தந்த வலியினால் அறுபட்டு போனது ஆனந்தம் மட்டுமல்ல அரவணைப்புக்களும் தான்
அன்பைத் தேடினேன் பாச உறவுகள் தந்த வலியினால் பறந்தே போனது பந்தங்கள் மட்டுமல்ல பாசங்களும் தான்
அகிம்சையை தேடினேன் பொறுமை தந்த வலியினால் வற்றிப்போனது பொதுநலம் மட்டுமல்ல மனத நேயங்களும் தான்
கனவுகளை தேடினேன் காலம் தந்த வலியினால் காணாமல் போனது நிஐங்கள் மட்டுமல்ல நிழல்களும் தான் Labels: கவிதைகள் |
posted by நந்தியா @ 9:10 PM  |
|
7 Comments: |
-
வாடாமல்லிக்கு வாழ்த்துக்கள்.
-
நல்லா இருக்கு, என்ன நீண்ட நாளா காணலை உங்க பதிவுகளை
-
வாடாமல்லிக்கு வாழ்த்துக்கள்.
---------- உங்கள் வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றிகள் நண்பரே..
நல்லா இருக்கு, என்ன நீண்ட நாளா காணலை உங்க பதிவுகளை... ம்ம் வெகுவிரைவில் அடுத்த பதிவு வெளிவரும். வருகைக்கு நன்றிகள் விஐ.
-
///அன்புள்ளங்களை தேடினேன் அத்தனையும் தந்த வலியினால் அறுபட்டு போனது ஆனந்தம் மட்டுமல்ல அரவணைப்புக்களும் தான்///
ஹ்ம்ம்ம்..ஆமாம்
-
உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றிகள் மங்கை.
-
i too share the same feelings. nice poem.
-
பாரதிய நவீன இளவரசன் said... i too share the same feelings. nice poem. *****
thankyou for your wonderful comments.
|
|
<< Home |
|
|
|
|
|
வாடாமல்லிக்கு வாழ்த்துக்கள்.