| 
  
    | 
                        
                          | Tuesday, April 10, 2007 |  
                          | வாடாமல்லிகையின் வலைப்பூங்கா சுத்தல |  
                          | வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்....வாடாமல்லிகையின் வந்தனங்களுடன் கூடிய வணக்கங்கள். 
 உங்கள் அனைவரையும் போல் இந்த வலைப்பூங்கா உலகில் ஒரு சுத்து சுத்தலாம் என்று தான் நானும் வந்திருக்கின்றேன். என்னையும் உங்கள் பாதையில் சுத்த விடுவிங்கள் தானே? பிறகு இது நம்ம ஏரியா அது இது என்று சொல்லிக் கொண்டு சண்டைக்கு வரக்கூடாது சொல்லிப்போட்டேன் ஆமா.
 
 இந்த கலி கால உலகில் அனுபவிக்கின்ற சுகங்கள் தூக்கங்கள் வித்தியாசமான அனுபவங்கள் மறக்க முடியாத இம்சைகள் மறக்க நினைத்த அந்த கணங்கள் என பலவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கின்றேன்.
 
 வாடாமல்லிகை பற்றி கொஞ்சம் என்றாலும் அறிய விரும்புகின்றீர்களா? விரும்பினாலும் விரும்பவிட்டாலும் ஒரு சிறிய அறிமுகம்.
 
 நிஐமான வாடாமல்லிகை பூ எப்படி வாடாமல் இருக்குமோ அப்படியே தான் இந்த நந்தியா என்றா வாடாமல்லிகையும் வாடமால் இருக்கும். அட வாடாமல்லிகை தானே வாசம் இல்லை என்று முணுமுணுப்பது கேட்கின்றது. இல்லைங்க இந்த நந்தியாவிற்கு ஒரு நாளில் பூத்து வாசம் வீசி மறு நாளில் பழுத்து விழுவதை விட எப்போதும் ஆடம்பரம் இல்லமால் பூத்து குலுங்க தான் பிடிக்குமாம். தாயக நினைவுகளை மனதில் தாங்கி ஏக்கத்துடனும் முழுமையாக அந்த இயற்கை இன்பங்களை அனுபவிக்க முடியமால் போன ஏமாற்றத்துடனும் வாசனைகளை இழந்து தத்தளிக்கும் வாடாமல்லிகைகளில் இந்த நந்தியாவும் ஒருத்தி என்பதை விரைவில் புரிந்து கொள்வீர்கள்.
 
 என்னவோ எல்லோரையும் போல பள்ளி பக்கம் மழைக்கு ஒதுங்க விட்டாலும் ஆமி முன்னேறி வரும்போது இடம்பெயர்ந்து போய் அந்தப் பக்கம் கொஞ்சம் கூட நாள் ஓதுங்கிவிட்டதால் என்னமோ இப்போ ஏதோ கைக்கு கொஞ்சம் கூட சம்பளத்தில் வேலை அத்துடன் அப்படி இப்படி என்று சுத்த நேரம் கிடைக்குது. இப்போதைக்கு இது காணும் என்று நினைக்கின்றேன். இனி நான் பேசவில்லை சீ எழுதவில்லை எனது அனுபவங்கள் என்னை எழுத வைக்கப்போகின்றது. ரசியுங்கள் அத்துடன் இன்னும் நன்றாக எழுதவும் வரும்காலத்தில் ஒரு நல்ல தமிழ் எழுதாளாராக இல்லாவிட்டாலும் ஒரு சிறந்த தமிழ் அறிவாளியாக வளர உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் தவறமால் பதிந்து விட்டு போங்கள் நண்பர்களே!
 |  
                          | posted by நந்தியா @ 6:21 PM  |  
                          | 
                                
                                  |  |  
                                  | 14 Comments: |  
                                  | 
                                      
                                      
                                          
                                          
                                      
                                          
                                          
                                            வணக்கம்,வரவேற்கிறம்நந்தியா, நிறைய எழுதுவியள் எண்டு எதிர்பார்க்கிறம் எழுதுங்கோ எழுதுங்கோ எழுதி கொண்டே இருங்கொ.... :)
                                          
                                          
                                      
                                          
                                          
                                            வாங்க வாங்க .   யாழ் இணையத்திலிருந்தா வாறீங்க அங்கத்தைய தோஸ்துகள் கனபேர் இங்கை இருக்காங்க அவங்களை யார் யார் கண் டுபிடிக்கிற தான் கஸ்டம்.அது சரிங்க யாழ் இணையத்திலை என்ன பெயருங்க
                                          
                                          
                                            வாடாமல்லிகையின் வாசல்தலத்திற்கு வந்து உங்கள் கருத்துக்களை சொன்ன "உவனுக்கு ஒரே சுத்தல் தான்" கானாபிரபாக்கும் மாங்காய் படத்தை போட்டு வாய் உற வைத்த வி.ஐ.சந்திரன்க்கும் நல்வரவு கூறிய மதி கந்தசாமி அவர்களுக்கும் "ஊர் உலாவாரம்" செய்கின்ற சின்னக்குட்டியாருக்கும் எனது நன்றிகள். 
 அது சரி சின்னக்குட்டியாரே உங்கள் எல்லோருடைய சுத்தலையும் பார்த்து தான் நானும் சுத்த வந்திருக்கின்றேன். அதற்காக யாழ் பெயர் எல்லாம் கேட்பதா?
                                          
                                          
                                            As you're here with Snehithy's intro, we expect many good stuff from you.No presure eh?!
 அது சரி..
 நீங்களும் "சிஞ்சா மனுசி"
 memberஆ?
                                          
                                          
                                            haha Bobby :-)))) nanthiyaku sinja manusi patri innum theriyathu:-))
                                          
                                          
                                            உங்கள் வருகைக்கு நன்றி Bobby கட்டாயம் நல்ல ஆக்கங்களை சினேகிதியும் நானும் சேர்ந்தே தாருவோம். அது சரி யாரு அந்த சிஞ்சா மனுசி?
                                          
                                          
                                      
                                          
                                          
                                      
                                          
                                          
                                            உங்கள் வருகைக்கு நன்றிகள் தருமி
                                          
                                          
                                            வருக் வருக் என்று வரவேற்கிறோம் வாழ்த்துக்களுடன்..
                                          
                                          
                                            ஓபனிங் என்னவோ நல்லாத்தான் இருக்கு ....................   :-))
                                          
                                          
                                            Balar: உங்கள் உற்சாகமான வரவேற்புக்கு மிக்க நன்றிகள்
 U.P.Tharsan"  என்ன இப்படி சப்ன்னு சொல்கின்றீர்கள்?
 |  
                                  |  |  
                                  | << Home |  
                                  |  |  |  |  |  | 
    
welcome to blogger world