வாடாமல்லி
Friday, April 6, 2007
காலங்கள் தந்த ஏமாற்றங்கள்

காதலை தேடினேன்
காத்திருப்பு தந்த வலியினால்
காணாமல் போனது
கற்பனைகள் மட்டுமல்ல
மகிழ்ச்சிகளும் தான்...

அன்புள்ளங்களை தேடினேன்
அத்தனையும் தந்த வலியினால்
அறுபட்டு போனது
ஆனந்தம் மட்டுமல்ல
அரவணைப்புக்களும் தான்

அன்பைத் தேடினேன்
பாச உறவுகள் தந்த வலியினால்
பறந்தே போனது
பந்தங்கள் மட்டுமல்ல
பாசங்களும் தான்

அகிம்சையை தேடினேன்
பொறுமை தந்த வலியினால்
வற்றிப்போனது
பொதுநலம் மட்டுமல்ல
மனத நேயங்களும் தான்

கனவுகளை தேடினேன்
காலம் தந்த வலியினால்
காணாமல் போனது
நிஐங்கள் மட்டுமல்ல
நிழல்களும் தான்

Labels:

posted by நந்தியா @ 9:10 PM 7 comments
About Me

Name: நந்தியா
Home: Canada
About Me:
See my complete profile
Previous Post
Archives

Links
Powered by

Free Blogger Templates

BLOGGER