Wednesday, April 11, 2007 |
வாடா மல்லி ஆ ? வாடாமல்லிகையா ?
|
எது சரி??? |
posted by நந்தியா @ 8:38 AM  |
|
|
Tuesday, April 10, 2007 |
வாடாமல்லிகையின் வலைப்பூங்கா சுத்தல
|
வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்....வாடாமல்லிகையின் வந்தனங்களுடன் கூடிய வணக்கங்கள்.
உங்கள் அனைவரையும் போல் இந்த வலைப்பூங்கா உலகில் ஒரு சுத்து சுத்தலாம் என்று தான் நானும் வந்திருக்கின்றேன். என்னையும் உங்கள் பாதையில் சுத்த விடுவிங்கள் தானே? பிறகு இது நம்ம ஏரியா அது இது என்று சொல்லிக் கொண்டு சண்டைக்கு வரக்கூடாது சொல்லிப்போட்டேன் ஆமா.
இந்த கலி கால உலகில் அனுபவிக்கின்ற சுகங்கள் தூக்கங்கள் வித்தியாசமான அனுபவங்கள் மறக்க முடியாத இம்சைகள் மறக்க நினைத்த அந்த கணங்கள் என பலவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கின்றேன்.
வாடாமல்லிகை பற்றி கொஞ்சம் என்றாலும் அறிய விரும்புகின்றீர்களா? விரும்பினாலும் விரும்பவிட்டாலும் ஒரு சிறிய அறிமுகம்.
நிஐமான வாடாமல்லிகை பூ எப்படி வாடாமல் இருக்குமோ அப்படியே தான் இந்த நந்தியா என்றா வாடாமல்லிகையும் வாடமால் இருக்கும். அட வாடாமல்லிகை தானே வாசம் இல்லை என்று முணுமுணுப்பது கேட்கின்றது. இல்லைங்க இந்த நந்தியாவிற்கு ஒரு நாளில் பூத்து வாசம் வீசி மறு நாளில் பழுத்து விழுவதை விட எப்போதும் ஆடம்பரம் இல்லமால் பூத்து குலுங்க தான் பிடிக்குமாம். தாயக நினைவுகளை மனதில் தாங்கி ஏக்கத்துடனும் முழுமையாக அந்த இயற்கை இன்பங்களை அனுபவிக்க முடியமால் போன ஏமாற்றத்துடனும் வாசனைகளை இழந்து தத்தளிக்கும் வாடாமல்லிகைகளில் இந்த நந்தியாவும் ஒருத்தி என்பதை விரைவில் புரிந்து கொள்வீர்கள்.
என்னவோ எல்லோரையும் போல பள்ளி பக்கம் மழைக்கு ஒதுங்க விட்டாலும் ஆமி முன்னேறி வரும்போது இடம்பெயர்ந்து போய் அந்தப் பக்கம் கொஞ்சம் கூட நாள் ஓதுங்கிவிட்டதால் என்னமோ இப்போ ஏதோ கைக்கு கொஞ்சம் கூட சம்பளத்தில் வேலை அத்துடன் அப்படி இப்படி என்று சுத்த நேரம் கிடைக்குது. இப்போதைக்கு இது காணும் என்று நினைக்கின்றேன். இனி நான் பேசவில்லை சீ எழுதவில்லை எனது அனுபவங்கள் என்னை எழுத வைக்கப்போகின்றது. ரசியுங்கள் அத்துடன் இன்னும் நன்றாக எழுதவும் வரும்காலத்தில் ஒரு நல்ல தமிழ் எழுதாளாராக இல்லாவிட்டாலும் ஒரு சிறந்த தமிழ் அறிவாளியாக வளர உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் தவறமால் பதிந்து விட்டு போங்கள் நண்பர்களே! |
posted by நந்தியா @ 6:21 PM  |
|
|
|
|